
அமெரிக்காவின் அதர்லேப் நிறுவனம், சார்ஜிங் பிளக்-இன் தேவையில்லாத சூரிய ஒளியில் இயங்கும் 'லைட்ஃபுட்' சோலார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்கூட்டர் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கி.மீ. வரை பயணிக்க முடியும், மேலும் ஒரு மணி நேரம் வெயிலில் நிறுத்தினால் 5 கி.மீ. தூரத்திற்கு சார்ஜ் ஏறும்.
சர்வதேச சந்தையில் இதன் விலை 4,995 அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4.75 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.