
டர்பனில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு 421 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அந்த அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
கடைசி நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற இன்னும் 296 ரன்கள் தேவைப்படும் நிலையில், கைவசம் 6 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன.