
அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, பெல்பாஸ்ட் நகரில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், கடந்த 7ம் தேதி நடைபெற்ற 2வது போட்டியில் ஆப்கானிஸ்தான் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்றைய போட்டி தொடரின் முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.