
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டிராவிஸ் ஹெட், 153 வாக்குகள் பெற்று தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஆலன் பார்டர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
ஜனவரி 29, 2025 முதல் ஜனவரி 8, 2026 வரையிலான காலகட்டத்தில், 2025-26 ஆஷஸ் தொடரில் 3 சதங்கள் உட்பட 629 ரன்கள் குவித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அலெக்ஸ் கேரி 152 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும், மிட்செல் ஸ்டார்க் 150 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.