
பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் வழங்க கூடுதல் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக அமைச்சர் கீர்த்தனா சட்டப்பேரவையில் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை கோரப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராஜன், அமைச்சர் அளித்த தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்பட்டதா மற்றும் இதில் அதிகாரிகள் அல்லது இடைத்தரகர்களின் பங்கு என்ன என்பது குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.