
செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் பொறுப்பற்ற முறையில் சூப்பர் இன்டலிஜென்ஸ் அமைப்புகளை உருவாக்குவதால், இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் மனித சமூகம் அழிய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் எச்சரித்துள்ளார்.
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் அலைன்மென்ட் சயின்ஸ் பிரிவு தலைவர் ஈவான் ஹூபிங்கர், அடுத்த 10 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவால் மனித குலத்திற்கு ஆபத்து ஏற்பட 10 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்புள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
போட்டியில் பின்தங்கிவிடக் கூடாது என்ற பயத்தில் நிறுவனங்கள் பாதுகாப்புத் திட்டங்களை முழுமையாக உருவாக்காமல் ஆபத்தான வேகத்தில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.