
அமெரிக்காவின் மேற்கு அலாஸ்காவில் உள்ள கேப் நியூவென்ஹாம் ரேடார் தளத்திற்கு அருகே வாடகை விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 8 பேரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்து அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரிலிருந்து 725 கி.மீ மேற்கே அமைந்துள்ள விமான நிலையத்தில் நிகழ்ந்ததாக அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்க விமானப்படை லெப்டினன்ட் ஜெனரல் ராபர்ட் டேவிஸ், இது ஒரு பேரழிவு இழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.