
ரைட்டர் பட இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், பிரபு மற்றும் விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை விழா சென்னையில் நடைபெற்றது.
டார்க் ஹியூமர் ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், மேலும் இதில் ரமேஷ் திலக், தீனா மற்றும் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் அவியேட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், பிக்பாஸ் 7 புகழ் விஜய் வர்மாவுடன் ஒரு முன்னணி நடிகை நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.