
தனது நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்சிக்' படம் இன்று வெளியாவதை முன்னிட்டு நடிகர் யாஷ் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதுடன், தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்டேவையும் அவர் சந்தித்து பேசினார்.
ஒவ்வொரு படம் வெளியாவதற்கு முன்பும் தர்மஸ்தலா கோவிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள யாஷைக் காண ரசிகர்கள் திரண்டதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.