
தமிழகத்தில் நாளை (அக்.15) வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மிக கனமழைக்கும், டெல்டா உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
வரும் 16 முதல் 18-ம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.