
ஈரான் உடனான மோதலைப் போர் என்று அழைக்க முடியாது என்றும், இது அமெரிக்காவிற்கு ஒரு சிறிய விஷயம் மட்டுமே என்றும் அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த மோதலில் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அமெரிக்க வரி செலுத்துவோருக்கு 37.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான செலவு ஏற்பட்டுள்ளது.
துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், தீவிரமான துப்பாக்கிச் சண்டை எதுவும் நடைபெறவில்லை எனக் கூறி, நவம்பர் 3-ம் தேதி தேர்தலுக்குள் மோதல் முடிவுக்கு வருமா என்ற கணிப்பைத் தவிர்த்தார்.