
பிரிட்டன் நாட்டின் முன்னாள் ராணுவ வீரரான 57 வயதான கார்ல் புஷ்பி, கடந்த 1998-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சிலி நாட்டில் இருந்து உலகப் பயணத்தைத் தொடங்கினார்.
மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தாமல் கால்களையே நம்பி பயணம் செய்த அவர், நடைபயணம் மற்றும் நீச்சல் மூலம் 29 நாடுகளைக் கடந்து கிட்டத்தட்ட 50,000 கி.மீ. தூரத்தைக் கடந்தார்.
ரஷ்யாவின் விசா சிக்கல்கள், உலகப் பொருளாதார வீழ்ச்சி மற்றும் கோவிட் பெருந்தொற்று காரணமாகப் பயணம் நீண்ட நிலையில், அவர் தனது சொந்த ஊரான ஹல் நகருக்குத் திரும்பினார்.