
2023-ம் ஆண்டு வெளியான 'பார்பி' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகவிருந்த நிலையில், ஊதிய ஒப்பந்த சிக்கலால் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் கிரேட்டா கெர்விக் மற்றும் நடிகை மார்கோட் ராபி உள்ளிட்ட படக்குழுவினர் அதிக ஊதியம் கேட்பதாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் 6 முறைக்கு மேல் ஊதிய ஒப்பந்த வாய்ப்புகளை வழங்கியும், படக்குழு நிராகரித்ததால் இப்படம் உருவாவதில் சிக்கல் நீடிக்கிறது.