
வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று ரூ.200 குறைக்கப்பட்டு, ரூ.2,906-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஜூலை 1ஆம் தேதி வணிக சிலிண்டர் விலை ரூ.174 முதல் ரூ.183.50 வரை குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
வீட்டு உபயோகத்திற்கான 14 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.