ஐரோப்பிய அகாடமி ஆஃப் நியூராலஜி மற்றும் வியன்னா மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், தூக்கமின்மைக்கும் பக்கவாதத்திற்கும் நேரடித் தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது.
தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுவோருக்குப் பக்கவாதம் வரும் அபாயம் 26 சதவீதம் வரை அதிகரிப்பதாக ஒன்பது ஆய்வுகள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையும் 28 சதவீதம் அதிகமாக உள்ளதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.