
ஆப்பிள் நிறுவனம் தனது 'ஆப்பிள் பே' (Apple Pay) சேவையை 2026 அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக விசா மற்றும் மாஸ்டர்கார்டு கிரெடிட் கார்டு பயனர்களை இலக்காகக் கொண்டு இந்தச் சேவை தொடங்கப்பட உள்ள நிலையில், யுபிஐ வசதி பின்னாட்களில் சேர்க்கப்படும்.
ஐசிஐசிஐ, ஹெச்.டி.எப்.சி. மற்றும் ஆக்சிஸ் வங்கிகளுடன் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், பயனர்கள் ஐபோன் மூலம் என்எப்சி இயந்திரங்களில் பாதுகாப்பாகப் பணம் செலுத்த முடியும்.