
ரூ.2000க்கு மேல் மேற்கொள்ளும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முடிவை நியாயப்படுத்தி நீதி ஆயோக் துணைத் தலைவர் அசோக் குமார் லஹிரி கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு 100 ரூபாய் பரிவர்த்தனைக்கு 40 பைசா கட்டணம் செலுத்துவதால் ஒன்றும் செத்துவிட மாட்டீர்கள் என்று அவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண ஏழை எளிய மக்களையும் சிறு குறு வணிகர்களையும் இது போன்று கட்டணம் வசூலிப்பது பாதிப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.