
தமிழகத்தின் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நாளை ஆகஸ்ட் 25-ம் தேதி இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை உபாசி மற்றும் ராணிப்பேட்டை மின்னலில் தலா 7 செ.மீ மழையும், சின்னக்கல்லாரில் 6 செ.மீ மழையும் அதிகபட்சமாகப் பதிவாகியுள்ளது.
ஆகஸ்ட் 27 மற்றும் 28 தேதிகளில் வட தமிழகத்தின் உள் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.