
அலாஸ்காவின் கேப் நியூனென்ஹாம் ரேடார் தளத்தில் தரையிறங்க முயன்ற சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 8 பேரும் உயிரிழந்தனர்.
அடர்ந்த மூடுபனி காரணமாக விமானிகள் ஓடுபாதையை பார்க்க முடியாமல் கருவிகளை மட்டுமே நம்பியிருந்த நிலையில், வியாழக்கிழமை நண்பகல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் அமெரிக்க ராணுவ பொறியியல் பிரிவின் ஊழியர்கள் இருவர் அடங்குவர் என்றும், இது ராணுவத்திற்குப் பெரும் இழப்பு என்றும் லெப்டினன்ட் ஜெனரல் ராபர்ட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.