
சவுதி அரேபியாவிற்கு உம்ரா யாத்திரை சென்ற இந்திய குடிமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் நாடு திரும்பிவிட்டதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 10,000 உம்ரா யாத்ரீகர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில், எஞ்சிய யாத்ரீகர்களுக்கும் தேவையான உதவிகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாத்ரீகர்களின் உதவிக்காக ரியாத் மற்றும் ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகங்களின் கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகின்றன.