
ஜெர்மனியின் பவரியா மாகாணம் ரோசன்ஹிம் நகரில் உள்ள ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த 31 வயது இளம்பெண் உயிரிழந்தார்.
இந்த தாக்குதலை நடத்திய பர்ஸ்டன்பெல்ட்ப்ரூக் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த இளம்பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.