
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன், தனக்கு மிகவும் பிடித்த பேட்டராக சச்சின் டெண்டுல்கருக்குப் பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாராவைத் தேர்வு செய்துள்ளார்.
பிரையன் லாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார், அதேபோல் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்கள் குவித்துள்ளார்.
ஹைடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8625 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.