திருத்தணி ஒன்றியம் அரும்பாக்கம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்படாததால் குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
தெருக்களில் குப்பை கழிவுகள் முறையாக அகற்றப்படாததால் குப்பைகள் மற்றும் செடி கொடிகள் வளர்ந்து கொசு உற்பத்தியாகி வருகிறது.
வானிலையில் மாற்றம் ஏற்பட்டு சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு குழந்தைகள் முதல் முதியோர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.