
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் வெளிநாடுகளில் பணியாற்றிய 37,740 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் சுமார் 86 சதவீதத்தினர் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்தவர்கள் என்றும், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 1,340 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் தகவல்படி, 2024-25 நிதியாண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகத்திற்கு 135 பில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நியச் செலாவணியாக அனுப்பியுள்ளனர்.