
குஜராத் மாநிலம் சூரத்தில் ஜவுளி கடை நடத்தி வரும் ராம்ஸ்வரூப் முண்டே தனது நிறுவனத்தின் 20 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக தலா ரூ.1 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக வழங்கியுள்ளார்.
பளபளக்கும் வெள்ளி நிறப் பூஜைத் தட்டுகளில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த ரொக்கப் பணம், பல ஊழியர்களின் மனைவிகளிடம் நேரில் ஒப்படைக்கப்பட்டது.
எதிர்பாராத இந்தப் பரிசால் தங்களின் வீடு வாங்கும் கனவு நனவாகும் என்று சில ஊழியர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.