
சென்னை பட்டினப்பாக்கத்தில் 26.36 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால், சென்னைக்கு வெளியே 500 முதல் 1,000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
1911-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி புதுதில்லி நிர்வாக நகரத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது போல, தொலைநோக்குப் பார்வையுடன் புதிய நிர்வாக நகரத்தை அமைக்க வேண்டும் என்பது பா.ம.க-வின் கோரிக்கையாகும்.