
சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள செம்மஞ்சேரி கல்லூரியைச் சேர்ந்த 1300 மாணவர்கள் ஒன்றிணைந்து சாட்பாட் மற்றும் ராக்பாட் ஆகிய இரண்டு புதிய ஜெனரேட்டிவ் AI செயலிகளை உருவாக்கினர்.
மருத்துவம், கல்வி, மின்னணு வணிகம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட 15 துறை சார்ந்த சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் வெறும் 2 மணி நேரத்தில் இந்த செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் இந்த சாதனை இந்தியன் புக் ஆப் ரெகார்ட்ஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு, சத்யபாமா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.