
சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 'அசினி' என்ற ஈரான் மீன்பிடி கப்பலையும், அதில் இருந்த 20 மாலுமிகளையும் இந்தியக் கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து வெற்றிகரமாக மீட்டன.
மும்பையிலிருந்து 3,000 கி.மீ தொலைவில் அரபிக் கடலில் 48 மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாலுமிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பாதுகாத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ளதுடன், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் இந்தியாவின் திறன் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.