
உக்ரைன்-ரஷியா போர்க்களத்தில் தனது இரு கால்களையும் இழந்து 491 நாட்கள் குழியில் தவித்த கான்ஸ்டான்டின் விளாசென்கோ என்ற 49 வயது வீரர் மீட்கப்பட்டார்.
ரஷியத் தாக்குதலில் இடது காலை இழந்த அவர், வலது காலிலும் தொற்று பரவாமல் இருக்க தானே கத்தியால் வெட்டிக்கொண்டு ஒரு சிறிய குழியில் தஞ்சம் புகுந்திருந்தார்.
உக்ரைன் ராணுவம் Ayudag 6 என்ற ராட்சத டிரோன் மூலம் அவரைப் பாதுகாப்பாக மீட்டு கார்கிவ் மருத்துவமனையில் சேர்த்துள்ளது.