
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர், மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.
இரு நாடுகளும் கடந்த 5-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தியிருந்த நிலையில், ஒப்பந்தம் காலாவதியானதும் மீண்டும் போர் தொடங்கியுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த போரில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.