
டாபர் நிறுவனத்தின் உணவுப் பொருட்களில் '100 சதவீதம்' என்ற வாசகத்தைப் பயன்படுத்த எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. விதித்த தடையை டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலமாக நிறுத்தி வைத்துள்ளது.
நிறுவனத்திற்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்காமல் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அடுத்த விசாரணை வரை இந்தத் தடை அமலில் இருக்காது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேன், தேங்காய் எண்ணெய், நெய் உள்ளிட்ட பொருட்களில் '100 சதவீதம் இயற்கையானது' என்ற விளம்பர வாசகத்தை டாபர் நிறுவனம் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.