கோவை அவிநாசி சாலையில் நள்ளிரவில் சில இளைஞர்கள் நவீன பைக்குகளில் ஆபத்தான முறையில் வீலிங் செய்து சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சித்ராவில் தொடங்கி பீளமேடு ஹோப்ஸ் வரை நான்கு இளைஞர்கள் அதிவேகமாகச் சென்றது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விதிமுறைகளை மீறி வீலிங் செய்வோர் மற்றும் விபத்து ஏற்படுத்துவோரின் வாகனங்களைப் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.