
இந்தோனேஷியாவின் பாலி தீவில் ஹிந்துக்கள் கொண்டாடும் நியேபி பண்டிகையை அவமதித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த லூசியன் ஆன்ட்ரின் என்பவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டென்பசார் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், தான் பாரம்பரியம் அறியாமல் செய்த தவறுக்காக மன்னிப்பு கோரிய நிலையில், அவர் ஏற்கனவே சிறையில் கழித்த ஐந்து மாதங்கள் தண்டனைக் காலத்திலிருந்து கழிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 19 அன்று நடைபெறும் நியேபி பண்டிகையின் போது, சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைவரும் சத்தம் எழுப்பாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்ற விதியை மீறியதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.