
பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவுரவ் சென், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் சாலைகளில் உள்ள பள்ளங்களை கண்டறியும் புதிய கருவியை உருவாக்கியுள்ளார்.
இந்த கருவி ஜிபிஎஸ் கேமரா மூலம் பள்ளங்களின் அளவை கணக்கிட்டு, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு ஆதாரத்துடன் புகார் மனுவை அனுப்பும் வசதி கொண்டது.
இணையத்தில் உள்ள 2,900 அரசு ஒப்பந்தங்களை ஆய்வு செய்து, தவறு செய்யும் அதிகாரிகளை கண்டறியும் வகையில் இந்த ஏஐ தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.