ரஷ்யாவின் டாடர்ஸ்தான் மாகாணத்தில் உள்ள நிஸ்னேகாம்ஸ்க் நகரில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆகஸ்ட் 10 அன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 39 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், குடியிருப்புகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளைக் கடந்த ரஷ்யா-உக்ரைன் போரில், அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.