
பீஜிங்கில் நடைபெறும் பெண்களுக்கான சீன ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு போலந்தின் இகா ஸ்வியாடெக் முன்னேறியுள்ளார்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற கணக்கில் அமெரிக்காவின் இவா ஜோவிச்சை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்சிடம் தோல்வியடைந்த நிலையில், காலிறுதியில் ஸ்வியாடெக் மெர்டென்ஸை எதிர்கொள்கிறார்.