
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய ஹிமாலயன் 750 மாடலை லடாக்கில் காட்சிப்படுத்திய நிலையில், நவம்பர் மாதம் EICMA 2026 நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த பைக்கில் 50 ஹெச்பி பவர் மற்றும் 64 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் 750 சிசி பேரலல் டுவின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
க்ரூயிஸ் கண்ட்ரோல், டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் வசதிகளுடன் வரும் முதல் ராயல் என்ஃபீல்டு பைக் இதுவாகும்.