
ரஷ்யாவின் ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள எரிபொருள் கிடங்கு மீதான தாக்குதலில் பிரிட்டன் தயாரிப்பு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக ரஷ்ய தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைன் நெருக்கடியை பிரிட்டன் திட்டமிட்டு தீவிரப்படுத்துவதாகக் கூறிய ரஷ்யா, பிரிட்டிஷ் தொழில்நுட்பம் தாக்குதல்களுக்கு உடந்தையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனுக்குத் தொடர்ந்து ஆயுதங்களை வழங்குவோம் என பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் உறுதியாகத் தெரிவித்துள்ளது.