ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் மர்பி விட்டோவ்சன், 2020-ஆம் ஆண்டு டாஸ்மேனியா கடற்கரையில் உள்ள 'டீல் தீவில்' கண்டறிந்த ஒரு புதிய ஓநாய் சிலந்தி இனத்திற்கு 'ஆர்டோரியோப்சிஸ் மர்பி' என விஞ்ஞானிகள் பெயரிட்டனர்.
லான்செஸ்டனில் உள்ள 'ராணி விக்டோரியா அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடத்தின்' சிலந்தி ஆராய்ச்சியாளர் ஜான் டக்ளஸ், மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சிலந்தி வகைப்பாட்டியல் நிபுணர் டாக்டர் வோல்கர் ஃபிராமெனாவிடம் மேல் ஆய்விற்காக அனுப்பினார்.
இந்த 5 மில்லிமீட்டர் அளவுள்ள 'ஆர்டோரியோப்சிஸ் மர்பி' சிலந்திகள் மனிதர்களுக்கு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாது என ஆராய்ச்சியாளர் ஜான் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.