
அனுமதிக்கப்படாத மற்றும் ஆபத்தான பாதையில் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் கடல் கண்ணிவெடி மீது மோதி தீப்பற்றியது.
கப்பல் விபத்துக்குள்ளாகும் முன்பு தனது உலகளாவிய இருப்பிடக் கட்டுப்பாட்டு அமைப்புகளை (ஜிபிஎஸ்) அணைத்துவிட்டதாக ஈரான் புரட்சிகர காவலப்படை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா போர் தொடுத்ததைத் தொடர்ந்து உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.