
தென்னிந்தியாவில் பிறப்பு விகிதம் 1.5 ஆகக் குறைந்துள்ளதால், ஆந்திர அரசு 2 அல்லது 3 குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்க முன்மொழிந்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு 18 வயது வரை இலவசக் கல்வி மற்றும் மாதம் ரூ.1,000 ஊட்டச்சத்து உதவித்தொகை வழங்கவும் ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.
சிங்கப்பூர் அரசு பிறப்பு விகிதத்தை உயர்த்த ஒவ்வொரு குழந்தைக்கும் 17 வயது வரை சுமார் ரூ.46.5 லட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.