பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் தனது நிரந்தர வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை 15 முதல் 40 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது.
அக்டோபர் 7, 2026 முதல் அமலுக்கு வரும் இந்த திருத்தப்பட்ட வட்டி விகிதங்களின் மூலம் புதிய வைப்பு நிதிகளுக்கு 7.75% வரையிலும் வட்டி பெறலாம்.
மூத்த குடிமக்கள் அனைத்து காலகட்டங்களுக்கும் வழக்கமான வட்டி விகிதங்களை விட கூடுதலாக 0.40% பெற்று, ஆண்டுக்கு 8.15% வரை வட்டி பெற முடியும்.