/nakkheeran/media/media_files/2026/10/19/maragatham-kumaravel-c-joseph-vijay-2-2026-10-19-14-55-10.jpg)
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் வளர்ச்சிக்காகப் புதிய திட்டங்களை முதல்வர் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
மதுராந்தகத்தில் ரூ.20 கோடியில் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ரூ.10 கோடியில் விபத்து மற்றும் அவசரகாலச் சிகிச்சைப் பிரிவு ஆகியவை அமைக்கப்படும்.
புக்கத்துறை மடுவின் குறுக்கே தடுப்பணை, நெல் கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள் மற்றும் ஏரிகளைத் தூர்வாரும் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.