
23 வயதான திலக் வர்மா 24 முதல்தர போட்டிகளில் 55.77 சராசரியுடன் 1729 ரன்கள் குவித்து, தனது டெஸ்ட் கிரிக்கெட் திறமையை நிரூபித்து வருகிறார்.
துலீப் டிராபியில் சவுத் ஜோன் அணியை இறுதிப்போட்டிக்கு வழிநடத்திய திலக் வர்மா, ஆப்கானிஸ்தான் தொடருக்காகத் தனது ஆட்டத்தை மாற்றியமைக்கத் தயாராகி வருகிறார்.
சிவப்பு பந்து கிரிக்கெட் தனக்குப் பிடித்தமான வடிவம் என்று கூறிய அவர், கடந்த 5-6 ஆண்டுகளாக வெள்ளை பந்து கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி வருவதாகத் தெரிவித்தார்.