
இயக்குநர் யுகேந்தர் முனி இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘கரிகாலா’ படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
சோஷியோ ஃபேண்டஸி பாணியில் உருவாகும் இந்த பான் இந்தியா திரைப்படம் இரண்டு அத்தியாயங்களாக வெளியாக உள்ளது.
இப்படத்தின் முதல் அத்தியாயம் 2027 ஜூலை 2-ம் தேதியும், இரண்டாம் அத்தியாயம் அக்டோபர் 28-ம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.