
உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் சொலோமியான்கி மற்றும் டர்னிட்ஸ்கி பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட மொத்தம் 22 பேர் காயமடைந்துள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேட்டோ கூட்டணியில் இணைவதைத் தடுக்கும் நோக்கில் 2022-ம் ஆண்டு முதல் ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து போர் நடத்தி வரும் சூழலில், இந்த புதிய தாக்குதல் நிகழ்ந்துள்ளது.