
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஆஷ்லே கார்ட்னர், தனது ஓரின மனைவி மோனிகா ரைட் சுமத்திய துரோகக் குற்றச்சாட்டுகள் குறித்து முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2025 ஏப்ரலில் திருமணமான இவர்களது உறவில், இந்தியாவில் நடந்த 2025 மகளிர் உலகக் கோப்பையின் போது விரிசல் ஏற்பட்டு, தற்போது விவாகரத்து வரை சென்றுள்ளது.
துணை கேப்டன் பதவியைப் பறிக்க மோனிகா வலியுறுத்திய போதிலும், கார்ட்னருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும், பிக் பாஷ் லீக்கின் சிட்னி சிக்சர்ஸ் அணியும் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன.