
ஓசூர் தொகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்பதால், இத்திட்டத்தை கைவிட வேண்டும் என அதிமுக எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
ஓசூரில் ஏற்கனவே தனியார் விமான நிலைய கட்டமைப்பு உள்ளதால் அதை மேம்படுத்தலாம் என்றும், ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களை உள்ளடக்கி புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர முடியாது என வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்து, விமான நிலையத்தால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று தெரிவித்தார்.