
சுலோவாகியாவில் நடக்கும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக யூத் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் தானு சர்மா 72 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பைனலில் ஜப்பானின் சிசாட்டோவிடம் 3-5 என்ற கணக்கில் தானு தோல்வியடைந்தாலும், அரையிறுதியில் அஜர்பெய்ஜானின் ஜாஹ்ரா கரிம்ஜடாவை 11-0 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதே தொடரில் இந்தியாவின் காஜல் (76 கிலோ) மற்றும் சவிதா (62 கிலோ) ஆகியோரும் தங்களது பிரிவுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.