
அமெரிக்கா ஈரான் மீது அணு ஆயுதங்களை ஒத்த அழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் வெள்ளை மாளிகை உள்ளிட்ட ராணுவத் தளங்கள் இலக்காகும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் நேரடிப் போர் நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டால், GBU-43/B MOAB எனப்படும் 9.8 டன் எடையுள்ள அபாயகரமான வெடிகுண்டை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் அப்பாஸ் முக்தாய், அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.